Enable Javscript for better performance
ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரத்தில் நகர தமாகா சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் 54-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
     கடலூர் மத்திய மாவட்டம், சிதம்பரம் நகர தமாகா சார்பில் சிதம்பரம் மேலரத வீதியில் சிறைமீட்ட விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் சிதம்பரம் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் கே.ரஜினிகாந்த் வரவேற்றார், மாவட்ட நிர்வாகிகள் கே.நாகராஜன், எஸ்.கே.வைத்தி, ராஜா சம்பத்குமார்,கோ .குமார், பாண்டு, வட்டார தலைவர்கள் சேதுமாதவன், பரமநாதன், கே.ராஜலெட்சுமி, சுப்புலெட்சுமி, தில்லைசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     சிதம்பரம் மேலவீதி சிறைமீட்ட விநாயகர் கோயில் அருகே 500 பெண்களுக்கு பொங்கல் வைக்க சில்வர் பாத்திரங்களையும், 200பெண்களுக்கு புடவைகளையும் கடலூர் மத்திய மாவட்ட தமாகா தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் தமாகா கொடியை மாநில பொதுச் செயலரும், மாநில மேலிடப் பார்வையாளருமான ஏ.எஸ்.முன்வர் பாஷா ஏற்றி வைத்தார். மாநிலச் செயலர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார் இனிப்புகளை வழங்கினார் . மாவட்ட இளைஞரணி சார்பில் சிதம்பரம் புறவழிச்சாலை அருகே உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் பி.கே..காந்தி, டாக்டர் எல்.இ.பி.வெற்றிவீரமணி, பி.டி.குணசேகரன், எம்.கே.பாலா, குமார் இன்பரசு, நகர நிர்வாகிகள் சின்ராஜ், ஆறுமுகம், இளங்கோவன், நடராஜ், பட்டாபிராமன், இளைஞரணி நிர்வாகிகள் சிங்காரவேல், கணேஷ், ராகுல், ராஜாராம், ராதா, நீலாவதி, மகளிரணி நிர்வாகிகள் மீனா, ஜனகம், மாலா, ருக்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட மாணவரணித் தலைவர் என்.மணிகண்டன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai