சுடச்சுட

    

    தமிழக உரிமைகளை திமுகவும், அதிமுகவும் சீரழித்துவிட்டன

    By  சிதம்பரம்  |   Published on : 29th December 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக உரிமைகளை திமுகவும், அதிமுகவும் சீரழித்துவிட்டதாக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் குற்றஞ்சாட்டினார்.
     சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்து, வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
     இந்த நிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில், 9,631 பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், தமிழ்நாட்டவர் மட்டுமன்றி, வெளிமாநிலத்தவர், நேபாளம், பூடான் உள்ளிட்ட வெளிநாட்டினர் மற்றும் பாகிஸ்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
     எனவே, தமிழக அரசுப் பணிகளில் நூறு விழுக்காடு இடங்களையும், இந்திய அரசு, தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றக் கோரி, வருகிற பிப்வரி 3-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் தோழைமை அரசியல் கட்சித் தலைவர்களுடன் காலை முதல் மாலை வரை மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.
     கடலூர் - நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் தொடங்கவுள்ள பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும். தமிழக அரசும் அந்தத் திட்டத்தை ஏற்கக் கூடாது.
     தற்போது தேர்தல் ஜனநாயகத்தைச் சூதாட்டமாக மாற்றிவிட்டனர். வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று கொள்ளையடிப்பது என்பதை உருவாக்கியது திமுகவும், அதிமுகவும்தான்.
     மக்கள்தான் போராடி பண்பாட்டைப் பாதுகாத்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு மக்கள்தான் பாடம் புகட்ட வேண்டும். தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் - உரிமை, மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் போராட முன்வர வேண்டும்.
     ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் பெ.மணியரசன்.
     தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலர் கி.வெங்கட்ராமன், பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, ரெ.ராசு, க.அருணபாரதி, க.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
     முன்னதாக, சிதம்பரம் தெற்குரத வீதி வர்த்தகர் சங்க அரங்கில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது.
     கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை என தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மாநாடு நடத்துவது, கடலூர், நாகை மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ள பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai