Enable Javscript for better performance
தமிழக வாழ்வாதார பிரச்னைகளில் ரஜினி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை?: தி.வேல்முருகன் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    தமிழக வாழ்வாதார பிரச்னைகளில் ரஜினி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை?: தி.வேல்முருகன் கேள்வி

    By  கடலூர்,  |   Published on : 29th December 2017 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Velmurugan

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக வாழ்வாதார பிரச்னைகளில் இதுவரையில் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
     கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தொழிற்சாலையில் டான்பாக் நிர்வாகப் பணியாளர்கள் வாழ்வுரிமைச் சங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
     ஒக்கி புயல் சேதம் குறித்து ஒரு மாதத்துக்குப் பின்னர் மத்தியக் குழுவினர் பார்வையிட வந்துள்ளது கண்டனத்துக்குரியது. இந்தப் புயலால் 400 பேர் காணாமல் போனதாக அரசு அறிவித்துள்ளது. அவர்களை இறந்தவர்களாக அறிவித்து ரூ. 20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய தீர்வைக் காண வேண்டும்.
     தமிழகத்தை ஆள்வதற்கு தமிழர்களில் சிறந்த தலைமைப் பண்பு, நிர்வாகத் திறன் கொண்டவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். ஆனால், 7 கோடி தமிழர்கள் அதற்குத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தை ரஜினி ஏற்படுத்தி வருகிறார். திரைப்படத் துறையிலிருந்து வந்து நாட்டை ஆண்டவர்கள் போதும். ஒக்கி புயல் பாதிப்பு, ஈழப் பிரச்னை, காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகளில் ரஜினிகாந்த் இதுவரையில் என்ன கருத்து தெரிவித்துள்ளார்? எதற்காகப் போராடியுள்ளார்? முதலில் இந்த பிரச்னைகளில் அவர் கருத்து தெரிவித்துவிட்டு, பின்னர் அரசியலுக்கு வரலாம் என்றார் அவர்.
     தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் த.பஞ்சமூர்த்தி, தொகுதிச் செயலர் த.ஆனந்த், மாவட்ட இளைஞரணித் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai