Enable Javscript for better performance
நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    By  கடலூர்,  |   Published on : 29th December 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த கடலூர் மாவட்டத்துக்கென சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 1,600 எக்டருக்கு ரூ. 12.39 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பயனாளிகள் இந்தத் திட்டத்தில் 5 எக்டர் வரை பயன்பெற முடியும்.
     இதன்படி, தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பழங்கள், மலர்கள், நறுமணப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன் பெறலாம்.
     தற்போது உள்ள மக்கள் தொகைக்கு உணவு உற்பத்தி போதுமான அளவு இருந்தாலும், உணவு உற்பத்திக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது.
     எனவே, நிலத்தடி நீரைச் சேமிக்கும் வகையிலும், உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், நுண்ணீர் பாசன அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
     எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் ற்ய்ட்ர்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ஞ்ர்ஸ்.ண்ய்/ட்ர்ழ்ற்ண்/ம்ண்ம்ண்ள் என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களுக்கு விருப்பமான நுண்ணீர் பாசன நிறுவனங்களைத் தேர்தெடுக்கலாம்.
     ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளின் நிதி ரூ. 1.05 கோடி உள்ளது. தகுதியுள்ளவர்கள் பயன் பெறலாம்.
     மேலும், அனைத்து விவசாயப் பெருமக்களும் தகுந்த ஆவணங்களுடன் (கணினி சிட்டா, அடங்கல், வயலின் வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் - 2, சிறு - குறு விவசாயி சான்று) வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம்.
     இதற்காக, வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் வருகிற 30- ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai