சுடச்சுட

  

  கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டான்பாக் நிறுவனத்தில் நிர்வாகப் பணியாளர்கள் வாழ்வுரிமைச் சங்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சங்கத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கெüரவத் தலைவராக அ.செந்தில், தலைவராக கே.கார்த்திக், செயலராக ஆர்.செந்தில்ராஜ், பொருளாளராக ஜெ.பிரபாகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
   சங்கக் கூட்டத்தில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 40 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பணி நேரம் முடிந்த பின்னர் கூடுதலாகச் செய்யும் பணிக்கு இருமடங்கு சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்விச் செலவு, மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, ஒன்றியச் செயலர் ரிச்சர்ட்தேவநாதன், தொகுதிச் செயலர் த.ஆனந்த், மாவட்ட இளைஞரணிச் செயலர் செந்தில், தொழிற்சங்கச் செயலர் காசிநாதன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சீனு, பி.ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai