சுடச்சுட

  

  புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடக்கிவைத்தார்

  By  நெய்வேலி,  |   Published on : 29th December 2017 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலி தொகுதிக்கு உள்பட்ட சிவநந்திபுரத்தில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
   கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோரணப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்டது சிவநந்திபுரம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் பழுதடைந்தது. இதனால், கிராம மக்கள் தண்ணீரின்றி அவதியடைந்து வந்தனர்.
   இந்த நிலையில், சிவநந்திபுரம் கிராம மக்கள் தங்கள்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும் என நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 6.50 லட்சம் செலவில், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை சபா.ராசேந்திரன் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
   ஒன்றிய அதிமுக பொருளாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றியச் செயலர் குணசேகரன், பொறியாளர் அணியின் மாவட்டத் துணை அமைப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட பிரதிநிதி ஏ.கே.செல்வராஜ், ஊராட்சிச் செயலர்கள் கோவிந்தராஜ், காசிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai