சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலரை நியமிக்கும் திட்டத்தில் பயன் பெற அழைப்பு

  By  கடலூர்,  |   Published on : 29th December 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலரை நியமிக்கும் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டது.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய அறக்கட்டளையின் உள்ளூர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
   இந்தக் குழுவின் உறுப்பினர்களாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், ஓயாசிஸ் மாற்றுத் திறனாளிகள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் எப்சிபா தவராஜ், அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஜெ.ராஜா, பொறியாளர் ராஜாகோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
   தேசிய அறக்கட்டளையின் மூலம் 18 வயது நிரம்பிய மன வளர்ச்சி குன்றிய மற்றும் பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாவலரை நியமிக்கும் திட்டமும் செயல்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
   விண்ணப்பிப்பவர்கள், மாற்றுத் திறனாளிக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை, ஆதார்அட்டை, குடும்பஅட்டை, காப்பாளரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களைச் சரியான முகவரியுடன் வழங்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளி, காப்பாளர் சேர்ந்து எடுத்துக் கொண்ட இரு புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
   கூடுதல் விவரங்களுக்கு கடலூர் வன்னியர்பாளையத்திலுள்ள ஒயாசிஸ் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai