சுடச்சுட

  

  ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்: விக்கிரமராஜா

  By  நெய்வேலி,  |   Published on : 29th December 2017 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டியில் மந்த கதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்த, தமிழக முதல்வரை சந்தித்து பேசவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
   பண்ருட்டி வழியாகச் செல்லும் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை செல்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையானது. எனவே, போக்குவரத்து நெரிசலைப் போக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதைத் தொடர்ந்து சுமார் ரூ. 19 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், மூன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வரும் இந்தப் பணியால் வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
   இந்த நிலையில், வியாழக்கிழமை பண்ருட்டிக்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, ரயில்வே மேம்பாலம் பணியைப் பார்வையிட்டார். மந்த கதியில் நடைபெற்று வரும் பணியைப் பார்த்த அவர், தமிழக முதல்வரை சந்தித்து பணியை விரைந்து முடிக்க வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலர் யாசின்மெüலான, துணைத் தலைவர் மோகன், மாநில இணைச் செயலர் தங்கராஜ், கடலூர் மாவட்டச் செயலர் வி.வீரப்பன், உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai