சுடச்சுட

    

    வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

    By  கடலூர்,  |   Published on : 29th December 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
     கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகிலுள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.
     அதன்படி, 2017 - 18ஆம் ஆண்டு பாசனத்துக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை திறந்துவிட்டார்.
     பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு, பருவ மழையைக் கருத்தில் கொண்டு 23 நாள்களுக்குத் தண்ணீர் வழங்கப்படும். விநாடிக்கு 250 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரால் 62 கிராமங்களைச் சேர்ந்த 24,059 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
     விவசாயிகள் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும். நீர் பங்கீடு செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால், அப்போது பொதுப் பணித் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.
     விருத்தாச்சலம் வருவாய்க் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ்.கணேஷ், வெள்ளாறு வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளர் பி.பாலசுப்ரமணியன், கோட்டச் செயற்பொறியாளர் எஸ்.கண்ணன், உதவிச் செயற்பொறியாளர் எம்.சண்முகம், திட்டக்குடி வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai