சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, எம்.ஆர்.கே. பாலிடெக்னிக் கல்லூரி கட்டடவியல் துறை இறுதியான்டு மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  சென்னையில் உள்ள வெல்சிட்டி கன்சல்டிங் என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், மனிதவள மேம்பாட்டு மேலாளர் டி.உதயக்குமார் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இதில் பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் 44 பேர் பங்கேற்றனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர். இதில், 23 மாணவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் வாழ்த்துத் தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வெல்சிட்டி கன்சல்டிங் இன்ஜினியரிங் நிறுவனத்தின் மூத்த மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
  பொறியியல் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தவேலு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai