Enable Javscript for better performance
கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்- Dinamani

சுடச்சுட

    

    கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    By DIN  |   Published on : 30th December 2017 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலர் அ.ராஜேந்திரன் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய அ.ராஜேந்திரன் பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்த அவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பயிற்சி வகுப்புகளையும், மஞ்சக்குப்பத்திலுள்ள ஸ்ரீவரதம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
    பின்னர் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. 10, 11, 12 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
    கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த இரா.முருகன் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai