சுடச்சுட

  

  கோயில் நிலத்தை மீட்கக் கோரி, திட்டக்குடியில் ம.கொத்தனூர் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திட்டக்குடியை அடுத்துள்ள ம.கொத்தனூரில் கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது. இந்தக் கோயில் நிலம் ஒரு
  தரப்பினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அவர்கள் அதை அனுபவித்து வருகின்றனராம். 
  இதுதொடர்பாக வட்டாட்சியரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டதாம். சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற வட்டாட்சியர் கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 
  அப்போது, தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கோயில் நிலங்களை ஒரு மாத காலத்துக்குள் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் பால் அங்காடி செயல்பட்டு வரும் கோயில் இடத்திலிருந்து அது இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
  எனினும், இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையாம். இதுதொடர்பாக பலமுறை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை திரண்டனர். பின்னர், கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியரிடம் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai