சுடச்சுட

  

  பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் 67}ஆவது மாதாந்திர அமர்வும், பாரதியார் பிறந்த நாள் விழாவும், நாள்காட்டி வெளியீட்டு விழாவும் முப்பெரும் விழாவாக திருவதிகையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன.
  செந்தமிழ்ச் சங்கத்தின் கெüரவத் தலைவர் எஸ்.வைரக்கண்ணு தலைமை வகித்தார். காப்பாளர் ஆர்.சஞ்சீவிராயர், செயற்குழு உறுப்பினர் ரத்தின.ஆறுமுகம், புரவலர்கள் பொன்.வேந்தன், கே.வி.ஆர்.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஏ.பாண்டு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எம்.பி. சொக்கநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
  சங்கத்தின் கெüரவத் தலைவர் எஸ்.வைரக்கண்ணு நாள்காட்டியை வெளியிட, காப்பாளர் ஆர்.சஞ்சீவிராயர் பெற்றுக் கொண்டார். முன்னதாக, பாரதியார் குறித்து நடைபெற்ற கவியரங்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கவிதை பாடினர்.
  சங்கத் தலைவர் சுந்தர.பழனியப்பன், செயலர் சொ.முத்துக்குமார், பொருளாளர் ஆ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வினோத் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai