சுடச்சுட

  

  சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை, தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு ஆகியவை சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் 54-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
  இதையொட்டி, சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மமன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, 500பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  மூப்பனார் பேரவையின் நிறுவனர் ஜெமினி. எம்.என்.ராதா தலைமை வகித்தார். கட்சியின் நகரச் செயலர் ஆட்டோ டி.குமார் முன்னிலை வகித்தார். நகரத் துணைத் தலைவர் ஆர்.சம்மந்தமூர்த்தி, மாநில சிறுபான்மைப் பிரிவு பொதுச் செயலர் ஸ்டிபன், முத்து, பாண்டி ஆகியோர் அன்னதானம் வழங்கினர். 
  நகர தமாகா துணைத் தலைவர் டி.பட்டாபிராமன், ரமேஷ், வாசன் நற்பணி மன்றச் செயலர் பி.செல்வக்குமார், பொருளாளர் எஸ்.செந்தில்குமார், ஜெயச்சந்திரன், ரகு, செந்தில்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அண்ணாமலைநகரில் அமைந்துள்ள பூமா கோயிலிலும், வண்டிகேட் அருகே அமைந்துள்ள தேவாலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai