சுடச்சுட

    

    நிலக்கரித் துறைச் செயலர் வருகை: கருப்புக் கொடி காட்ட முடிவு

    By DIN  |   Published on : 30th December 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்எல்சி இந்தியா நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், மத்திய நிலக்கரித் துறைச் செயலரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் கே.வெங்கடேசன் தெரிவித்தார்.
    என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிர்வாகம் நிறைவேற்ற முன்வரவில்லை. ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தைக் குறைப்பது, பணி நாள்களைக் குறைப்பது என ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    இந்த நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி நெய்வேலி வரும் மத்திய நிலக்கரித் துறைச் செயலருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், என்எல்சி இந்தியா நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையிலும் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai