Enable Javscript for better performance
பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில், பைக்கில் சென்ற வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
    விருத்தாசலம் அருகே உள்ள பொன்னாலகரம் கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (42). தனியார் பள்ளி வேன் ஓட்டுநரான இவர், வியாழக்கிழமை மாலை பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 
    அப்போது, விருத்தாசலம் முதன்மைச் சாலை, கொம்படிக்குப்பம் அருகே வந்தபோது, எதிர் திசையில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டரை முந்திக்கொண்டு வேகமாக வந்த தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊமங்கலம் போலீஸார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai