Enable Javscript for better performance
மின் வாரிய அலுவலகம் எதிரே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேலிருப்பு கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றியைச் 
    சீரமைக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பண்ருட்டி, பூங்குணம் மின்சார வாரிய அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பண்ருட்டி ஒன்றியம், மேலிருப்பு கிராமம், வடக்குத் தெருவில் இருந்த மின்மாற்றியில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் அதனை உடைத்து, அதில் இருந்த தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்றனர்.
    இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக மின்மாற்றியைச் சீரமைத்து மின்வாரிய அலுவலர்கள் பொறுத்தவில்லை. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
    இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பண்ருட்டி, பூங்குணத்தில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். 
    மனுவைப் பெற்றுக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து மின்மாற்றியைச் சீரமைத்து, பொறுத்துவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து 
    விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai