சுடச்சுட

    

    விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை கீழவீதி ஜாமிஆ பள்ளிவாசல் வளாகத்தில் மீலாது விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கீழவீதி ஜாமிஆ பள்ளி வாசல் தலைவர் அப்துல் கனி தலைமை வகித்தார். பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துர் ரஷீத் ரஹ்மானி கிராஅத் ஓதி கூட்டத்தைத் தொடக்கி வைத்தார். 
    முன்னதாக, முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் நகரத் தலைவர் அப்துல் பாரி வரவேற்றார். நிகழ்ச்சியில், சென்னை அடையாறு ஜாமிஆ பள்ளிவாசல் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி, ஜாபர்சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
    பள்ளிவாசல் துணைத் தலைவர் அப்துல் ரஹிமான், இமாம்கள் ஹபீப் முகமது, அபுதாஹீர், அலிபாதுஷா, நூருல் அமீன், சிக்கந்தர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். வழக்குரைஞர் முகமது இப்ராஹீம் நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai