சுடச்சுட

    

    முகமூடி அணிந்து பிரசாரம் செய்ய மார்க்சிஸ்ட் கட்சி முடிவு

    By DIN  |   Published on : 30th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நகரம் புழுதி மண்டலமாக மாறி வருவதைக் கண்டிக்கும் வகையில், வருகிற ஜனவரி 6-இல் முகமூடி அணிந்து இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்வதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
    அந்தக் கட்சியின் சிதம்பரம் நகர்க் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகர்க் குழு உறுப்பினர் வி.மல்லிகா தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.மாதவன், ஆர்.ராமச்சந்திரன், நகரச் செயலர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    தீர்மானங்கள்: சிதம்பரம் நகரம் முழுவதும் புதைச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு இரு ஆண்டுகள் கடந்த நிலையிலும் முடிக்கப்படவில்லை. இதனால், சாலைகள் தோண்டப்பட்டு, மோசமான நிலையில் உள்ளன. மேலும், இந்தச் சாலையில் செல்லும் வாகனங்களால் நகரமே புழுதி மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
    குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு ரூ. 200 கட்டணம் நிர்ணயித்திருந்தும், ரூ. 700 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. எனவே, இவற்றைக் கண்டித்து வருகிற ஜனவரி 6-ஆம் தேதி சிதம்பரம் முழுவதும் முகமூடி அணிந்து இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai