சுடச்சுட

  

  ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 30th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
  அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் பண்ருட்டி நகரில் ரயில்வே பாதையில் ரூ. 20 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்தக் காலம் முடிவுற்றப் பின்னரும் மேம்பாலப் பணி முடிவடையாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அணைக்கட்டின் இடது கரையில் பிரியும் மலட்டாற்றின் மூலமாக 9 ஏரிகளைச் சேர்ந்த 1,233.84 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. இந்த ஆற்றைச் சீரமைக்க ரூ. 23 கோடிக்கு உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒப்பந்தப் புள்ளி கோரப்படவில்லை. எனவே, பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  நெல்லிக்குப்பத்திலுள்ள ஈஐடி பாரி சர்க்கரை ஆலையால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைய வேண்டும். கடலூர் - கண்டரக்கோட்டை சுங்கச் சாலையைச் சீரமைக்க வேண்டும். பண்ருட்டி காய்கறி அங்காடியை கடலூர் சாலையில் முன்னர் இயங்கி வந்த நீதிமன்றம் இடத்துக்கு மாற்ற வேண்டும்.
  செட்டிப்பாளையம், சன்னியாசிப்பேட்டை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai