Enable Javscript for better performance
ரோட்டரி சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ரோட்டரி சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

    By DIN  |   Published on : 30th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா, ரோட்டரி குடும்ப விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
    ரோட்டரி சங்கத் தலைவர் பி.முகமதுயாசின் தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சேவை நலத் திட்டமாக உயர் கல்வி பயிலும் மாணவி ரோஷ்மா பானுவுக்கு ரூ.10 
    ஆயிரம் கல்வி உதவித் தொகையை ரோட்டரி சங்கத் தலைவர் பி.முகமதுயாசின் வழங்கினார். 
    விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தின் முன்னாள் பேராசிரியர் கே.கதிரேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். ரோட்டரி மூத்த உறுப்பினர்கள் லத்தீப்கான், இப்ராஹீம், பன்னீர்செல்வம், மோத்திலால், கோவிந்தராஜன், ஜெயராமன், மகபூப்உசேன், நடனசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி சங்கச் செயலர் தீபக்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai