சுடச்சுட

    

    வார்டு மறுவரையறை கருத்துக் கேட்பு: நுகர்வோர் சங்கம் கண்டனம்

    By DIN  |   Published on : 30th December 2017 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உள்பட்ட வார்டுகள் மறுவரையறை செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் தொடர் விடுமுறை நாள்களில் வருவதால், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முடியாது என நுகர்வோர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
    கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. சென்னை, நகராட்சி நிர்வாக ஆணையரின் வழிகாட்டுதலின் படி, நகராட்சியின் 30 வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது.
    கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட வார்டு மறுவரையறை அலுவலர் நகராட்சிக்கான வார்டுகள் எல்லையை மறுவரையறை செய்து, பொதுமக்கள் கருத்துக் கேட்புக்காக நகராட்சி அலுவலக வளாகத்தில் பார்வைக்காக வைத்துள்ளார்.
    இதில், பொதுமக்கள் தங்களின் கருத்துகள், ஆட்சேபணைகளை டிசம்பர 27}ஆம் தேதி முதல் ஜனவரி 2}ஆம் தேதிக்குள் நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காலத்தில் பண்டிகைகள், விடுமுறை தினங்கள் வருவதால், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து நெல்லிக்குப்பம் நுகர்வோர் } சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு சங்கத்தைச் சேர்ந்த ஆ.குமரவேல் கூறியதாவது:
    நெல்லிக்குப்பம் வார்டுகள் மறுவரையறை மீதான பொதுமக்கள் கருத்து தெரிவிப்பு காலம் விடுமுறை தினங்கள் வரும் நாள்களில் உள்ளது.
    எனவே, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி மக்களின் கருத்துகளை உள்வாங்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் நோக்கோடு செயல்படுவதாகத் தெரிகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai