Enable Javscript for better performance
ஆய்வுப் பணிக்காக அரசுக் கல்லூரிக்கு நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    ஆய்வுப் பணிக்காக கடலூர் அரசுக் கல்லூரிக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுக் கலை - அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் 25 பேருக்கு ஆய்வுப் பணிக்காக தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் நிதி உதவி வழங்கி வருகிறது. இதற்காக பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் தாக்கல் செய்யும் ஆராய்ச்சித் தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த நிதி உதவி வழங்கப்படும்.
    அதன்படி, கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஆர்.ராஜகுமார் இந்த நிதி உதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். "பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் காணப்படும் நுண்ணுயிரிகளின் பயன்பாடு ஓர் ஆய்வு' என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக்கு குறு ஆய்வுத் திட்ட உதவித் தொகையாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டது. ஆய்வுக்காக நிதி உதவி பெற்ற பேராசிரியரை கல்லூரியின் முதல்வர் ப.குமரன், பேராசிரியர்கள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai