சுடச்சுட

  

  உரிமை கோரப்படாத 147 வாகனங்கள்: உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்

  By DIN  |   Published on : 31st December 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டக் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் இருக்கும் 147 வாகனங்களை அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளின் போது குற்றவாளிகளால் விட்டுச் செல்லப்பட்ட ஏராளமான வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பதில் காவல் துறைக்கு சிரமம் ஏற்படுவதோடு, அவை வீணாகி வருவதால் அதனை உரிய முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் உள்ள 147 வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 90 நாள்களுக்குள் உரிமை கோரலாம். அவ்வாறு கோராதபட்சத்தில் வாகனங்களை ஏலம் விட அரசு முடிவெடுத்துள்ளது.
  இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, பதிவெண்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள், லாரி உள்ளிட்ட வாகனங்களின் விவரங்கள் காவல் நிலையம் வாரியாக கடலூர் மாவட்ட அரசிதழின் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
  எனவே, வாகனங்கள் காணாமல்போனவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களைக் காட்டி, வாகனங்களை பெற்றுச் செல்லலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai