Enable Javscript for better performance
கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
    கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி (55). அந்தப் பகுதியின் அதிமுக முன்னாள் கிளைச் செயலரான இவர், வெள்ளிக்கிழமை மாலை குமளங்குளத்திலுள்ள தனது கரும்பு வயலுக்கு காவலுக்குச் சென்றார். மறுநாளான சனிக்கிழமை காலையில் வழக்கம்போல அவர் வீட்டுக்குத் திரும்பாததால் குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது, கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்திலுள்ள மோட்டார் கொட்டகையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்.
    இதுகுறித்து தகவலறிந்த நடுவீரப்பட்டு காவல் நிலைய போலீஸார், அந்தச் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
    சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் வேல்முருகன் அளித்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம், இதில் தொடர்புடையோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai