Enable Javscript for better performance
சர்க்கரை நோய் பாதிப்பு: தொழிலாளி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    சர்க்கரை நோய் பாதிப்பால் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழந்தார்.
    புதுக்குப்பம் நேரு நகரைச் சேர்ந்தவர் சி.ராமமூர்த்தி (57), மெக்கானிக். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, அண்மையில் காலில் 2 விரல்களை மருத்துவர்கள் அகற்றினராம். இதனால், மன வேதனையடைந்த ராமமூர்த்தி, கடந்த 16-ஆம் தேதி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் தனது கைகளிலிலுள்ள நரம்புகளை பிளேடால் வெட்டியுள்ளார்.
    இதில், காயமுற்றவரை உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai