Enable Javscript for better performance
சிதம்பரம் நகரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நகரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

    By DIN  |   Published on : 31st December 2017 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ள நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த நகரில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    ஆருத்ரா தரிசன விழாவில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பதால், பாதுகாப்பான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அறிய இந்த ஆய்வு நடைபெற்றது. கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஜே.பத்மநாபன் (சிதம்பரம்), நந்தகுமார் (கடலூர்), கொளஞ்சியான் (காட்டுமன்னார்கோவில்), சுப்பிரமணியன் (குறிஞ்சிப்பாடி), குணசேகரன் (புவனகிரி), நல்லதம்பி (கம்மாபுரம்), அருண்மொழி (குமராட்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் சிதம்பரம் நகர பேருந்து நிலையக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான 100 லிட்டர் குளிர்பானங்களை கண்டறிந்து அழித்தனர். அதேபோல ரசாயனம் கலந்த புரூட் மிக்சர் என்ற பழச்சாறு 40 லிட்டரை கண்டறிந்து கீழே ஊற்றி அழித்தனர்.
    மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அதிகாரிகள் வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai