சுடச்சுட

  

  சனி பிரதோஷத்தையொட்டி, சிவன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  மார்கழி மாத சனி பிரதோஷம் என்பதால், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி தேவர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது.
  பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
  இதேபோல, புதுப்பேட்டை, செம்மேடு காசி விஸ்வநாதர் கோயில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில், பண்ருட்டி சோமேஸ்வரர் கோயில், குணபரீஸ்வரர் கோயில், வீரப்பெருமாநல்லூர் வியகரபுரீஸ்வரர் கோயில், திருவாமூர் பசுபதீஸ்வரர் கோயில், வேகாக்கொல்லை களப்பாலீஸ்வரர் கோயில், பேர்பெரியான்குப்பம் அனந்தபுரீஸ்வரர் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
  திட்டக்குடி: இதேபோல, திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலில் நந்திபெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் மழை, நீண்ட ஆயுள் வேண்டி பாலாலும், மோட்சம் வேண்டி நெய்யாலும், நல்ல வாரிசு வேண்டி தயிராலும், பொருளாதார முன்னேற்றம் வேண்டி பஞ்சாமிர்தத்தாலும் நந்திபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.
  நூற்றுக்கணக்கான பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். அபிஷேகத்துக்குப் பின்பு நந்திபெருமானுக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டும் மலர் அலங்காரம் செய்தும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், உற்சவர் கோயிலை சுற்றி வலம் வந்து அருள்பாளித்தார்.
  இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai