சுடச்சுட

  

  தொகுதி மறுவரையறை: அனைத்து கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை

  By DIN  |   Published on : 31st December 2017 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
  உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட பட்டியலை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டார். இந்தப் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
  இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரகம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவுக் கருத்துருக்கள் மீது பொதுமக்கள் கருத்துகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:
  தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்கு முறைகளின்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, வார்டு வரைவு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  இந்த வரைவு மறுவரையறை யின் மீது கருத்துகள், ஆட்சேபனைகள், புகார்கள், ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வருகிற ஜனவரி 2- ஆம் தேதி வரை எழுத்துப்பூர்வமாகவோ, நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட ஊரகம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றார்.
  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தி.ஜீஜாபாய், ஊராட்சிகளின் உதவி இயக்குநர்கள் ஆனந்தன், ராமசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai