சுடச்சுட

  

  இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
  பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடியில் செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சிக்கு, க.கண்ணதாசன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் அரா. கனகசபை, நம்மாழ்வார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆசிரியர் மு.பழனிவேல் கருத்துரை வழங்கினார். நடுவத்தின் பொறுப்பாளர் க.முருகன் நன்றி கூறினார்.
  நிகழ்ச்சியில், இயற்கை உழவர்கள், நடுவத்தின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர், திருவள்ளுவர் தமிழர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
  பண்ருட்டி: இதேபோல, பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு முனைச் சந்திப்பு, மணிக்கூண்டு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் உருவப் படத்துக்கு அந்தக் கட்சியினர், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு 400 மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்வில், கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டத் தலைவர் சாமிரவி, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டச் செயலர் வெற்றிவேலன், நகரச் செயலர் சையத் பாட்சா, மாவட்டத் தலைவர் கண்ணன், பண்ருட்டி ஒன்றியச் செயலர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai