Enable Javscript for better performance
பல்கலை.யில் தேசியப் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையில், "கூர்ந்து விமர்சிக்கப்பட்ட ஆய்வு ஏடு பிரசுரங்கள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சியில், தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், பிகார் மாநிலங்களிலிருந்து கலை, அறிவியல், பல் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் புலத்தைச் சார்ந்த 85 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
    பயிலரங்கில், உலகளாவிய அறிவியல் சஞ்சிகைகளில் பிரசுரிக்கும் வழிமுறைகள், நுட்பங்கள் குறித்து விரிவான தகவல்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிலரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். அவர் பேசுகையில், பிரசுரித்தலின் அவசியம், அதில் கல்வி நிலையங்களின் பங்களிப்பு குறித்தும், பிரசுரித்தல் பணிக்காக பல்கலைக்கழகங்கள் வழங்கும் நிதி மற்றும் பிற உதவிகள் பற்றியும் குறிப்பிட்டார்.
    பல்கலைக்கழக பதிவாளர் க.ஆறுமுகம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், ஆய்வேடு பிரசுரித்தல், பயிலரங்கம் மூலம் மாணவர் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் அவர்களது பொருளாதார மேம்பாடு குறித்து குறிப்பிட்டார். இயற்பியல் துறை முன்னாள் தலைவர் எஸ்.கிருஷ்ணன் பிரசுரித்தலின் அவசியத்தையும், அதன்மூலம் ஆய்வாளர்கள் அடையும் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
    முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவர் வி.ராமசாமி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் எல்.பழனியப்பன் பயிலரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் பி. சிவகுருநாதன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai