சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் வீட்டுக் கதவை உடைத்து 30 பவுன் நகை திருடுபோன வழக்கில் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    விருத்தாசலம் நகரைச் சேர்ந்தவர் அன்வர் சதாத். கடந்த 8-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விருத்தாசலம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த மயில்வாகனம் என்பவரது மகன் கணேசன் (20), வேட்டைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வமணி ஆகியோருக்கு நகை திருட்டில் தொடர்பிருப்பது தெரியவந்ததாம். இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 13 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai