சுடச்சுட

    

    ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 05th December 2017 04:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி, நெய்வேலியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
    ஊழல் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா மத்திய அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது.
    நிகழாண்டுக்கான விழா என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    இந்த நிலையில், ஊழல் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெய்வேலியில் உள்ள ஜம்புலிங்க முதலியார் சிலையிலிருந்து, பிரதான அங்காடி, காந்தி சிலை வரை சுமார் இரண்டரை கி.மீ. தொலைவுக்கு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    இதில், என்எல்சி இந்தியா நிறுவனப் பள்ளிகள், ஜவஹர், புனித ஜோசப் குளுனி, தாகூர், புனித அந்தோணியார், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    என்எல்சி இந்தியா நிறுவன கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன், மனித வளத் துறை செயல் இயக்குநர் என்.முத்து ஆகியோர் போட்டியை தொடக்கி வைத்தனர்.
    மாணவர்களுடன், என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்கள், பொதுமக்களும் போட்டியில் பங்கேற்றனர்.
    நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா மனிதவளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சங்கர், கல்வித் துறை தலைமைப் பொது மேலாளர்ஆர்.மோகன், கல்வித் துறை செயலர் ஐ.நெடுமாறன், பாரத ஸ்டேட் வங்கியின் நெய்வேலி கிளை தலைமை மேலாளர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
    கல்வித் துறை செயலர் ஐ.நெடுமாறன் நேர்மை உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனர்.
    பின்னர், பொன்விழா பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த நேர்மை சுவர் என்ற பதாகையில், ஊழலை ஒழிக்க துணையாக இருப்பேன் என மாணவர்கள் கையெழுத்திட்டனர். மினி மாரத்தான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்எல்சி இந்தியா கல்வித் துறை செய்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai