Enable Javscript for better performance
கழிவுநீர் குழாய் புதைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கழிவுநீர் குழாய் புதைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 22nd October 2017 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்பட்டாம்பாக்கத்தில் குட்டையிலிருக்கும் கழிவு நீரை வெளியேற்ற குழாய் புதைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் கரையான்குட்டை அமைந்துள்ளது. இந்தக் குட்டையில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. அண்மையில் பேரூராட்சிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்
    மு.வடநேரே, இந்தக் குட்டையை பார்வையிட்டு அதில் தேங்கியுள்ள கழிவு நீரை குழாய் மூலம் வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாராம்.
      இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் ரூ.36 லட்சம் செலவில் 2.5 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைத்து கழிவுநீரைவெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நத்தமேடு, புதுக்குப்பம், லட்சுமிபுரம் பகுதிகளில் அமைத்துள்ள சிமென்ட் சாலையை உடைத்து அதன் நடுவே குழாய் பதிக்கும்  பணி  நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பகுதி மக்கள் முன்னாள் கவுன்சிலர் லட்சுமி தலைமையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவு நீரை சுத்தம் செய்து மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.
     பின்னர், பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்றவர்கள், செயல் அலுவலர் குமாரை முற்றுகையிட்டனர். பின்னர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது  செயல் அலுவலர் கூறுகையில், ஆட்சியரது உத்தரவின்பேரிலேயே இந்தப் பணி நடைபெற்று வருவதாகவும்,  இதுகுறித்து ஆட்சியரை சந்தித்து முறையிடும்படியும் தெரிவித்தார்.  தொடர்ந்து பொதுமக்கள் கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.  
    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்துபோகச் செய்தனர்.  கோரிக்கை தொடர்பாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai