Enable Javscript for better performance
கொமந்தான்மேடு தடுப்பணையில் குவியும் மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் செல்வதால் அதனை ரசிக்க  கொமந்தான்மேடு தடுப்பணைக்கு திரளானோர் வந்து செல்கின்றனர். பலர் இங்கு தங்களது வாகனங்களை கழுவி சுத்தம் செய்கின்றனர்.
    கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி கடலூர் மாவட்டம், தாழங்குடாவில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது தென்பெண்ணையாறு. இந்த ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் ஆற்றில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை ஆகியவை முழுக் கொள்ளவை எட்டின.
    இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தை அடைந்தது. இதனால், கடலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெள்ளமாகச் சென்றது. எனவே, அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையளவு குறைந்ததால் தண்ணீர் வரத்து குறைந்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
    இதனால், ஆற்றில் வெள்ளப்போக்கு குறைந்ததால் ஆட்சியரகம் எதிரே உள்ள தடுப்பணையை தொட்டவாறு தண்ணீர் நிற்கிறது. இதனை காணவும், ஆற்று நீரில் குளிப்பதற்காகவும் திரளானோர் இங்கு வந்துச் செல்கின்றனர்.
    மேலும், தங்களது வாகனங்களை கழுவி சுத்தம் செய்யும் பணியிலும், மீன்பிடி பணியிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் கொமந்தான்மேடு தடுப்பணை தற்போது திடீர் சுற்றுலாத் தலமாக மாறி உள்ளது. எனினும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai