Enable Javscript for better performance
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி அரசு போக்குவரத்துப் பணிமனையில் தொழிலாளர்கள் சனிக்கிழமை அதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கட்டடம் வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் திட்டக்குடியில் இயங்கும் அரசு போக்குவரத்துப் பணிமனையும் முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளதாம். இந்த கட்டடத்தையும், பணிமனை வளாகம், பணியாளர்கள் ஓய்வறை, பணிமனைக்குள் செல்லும் சாலை ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் சனிக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் 5 மணி வரை பேருந்துகளை இயக்காமல் பணிமனை நுழைவுவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதனையடுத்து பணிமனை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்கினர். இதனால் திட்டக்குடி பணிமனையிலிருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் சுமார்  ஒரு மணிநேரம் இயக்கப்படவில்லை.
    மேலும், போராட்டத்தின்போது, பொறையாரில் உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai