Enable Javscript for better performance
வேளாண் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் (பணி மேலாண்மை) செந்தாமரை அண்மையில் ஆய்வு செய்தார்.
     நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் எம்.புதுப்பாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவரது வயலில் வேளாண்மைத் துறை, நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி நிறுவனம் ஒருங்கிணைந்து அமைத்த நிழல்வலை கூடத்தை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.
    அப்போது, ஈஐடி பாரி நிறுவன அலுவலர் ஸ்ரீதர் வேளாண் பணிகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
     மேலும், கந்தசாமி என்பவரின் கரும்பு வயலில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பையும் கூடுதல் இயக்குநர்  ஆய்வு செய்தார்.
    அப்போது, கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் கனகசபை, சம்பத்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் மல்லிகா, வேளாண்மை அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai