மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

காரில் மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞர் கைது

மதுப் புட்டிகளை காரில் கடத்திய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:53 am IST

மதுப் புட்டிகளை காரில் கடத்திய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இரா.வேதரத்தினம் உத்தரவின்பேரில் அமலாக்கப் பிரிவினர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையிலிருந்து வந்த காரை சோதனையிட்டதில் 10 அட்டைப் பெட்டிகளில் மதுபானம் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, கார் ஓட்டுநர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த கொளஞ்சி மகன் வெங்கடேசன் (28) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
 அவர் ஓட்டி வந்த கார், அதிலிருந்த தலா 180 மில்லி கொள்ளவு கொண்ட 480 மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
 தனது நண்பரின் திருமண நிகழ்ச்சி விருந்துக்காக மதுப் புட்டிகளை புதுச்சேரி கன்னிக்கோயில் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக வெங்கடேசன் தெரிவித்தாராம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.