காவலர்களுக்கு நிறைவாழ்வுப் பயிற்சி

காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான நிறைவாழ்வுப் பயிற்சி முகாம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.


காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான நிறைவாழ்வுப் பயிற்சி முகாம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
காவலர்கள் அதிக பணிச்சூழலில் உள்ளதால் விரைவில் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதனால், சமுதாயத்திலும், அவர்களது குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், காவலர்களது குடும்பத்தினருக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
இதனைப் போக்கிடும் வகையில் காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான நிறைவாழ்வு பயிற்சியளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இந்தப் பயிற்சியை, பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் பயிற்சி முடித்த காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி ஆய்வாளர் கனகவள்ளி, கடலூர் புனித வளனார் கல்லூரிப் பேராசிரியர் ராபின்ஜெயராஜ் ஆகியோர் அளித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம், துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜொ.லாமேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com