சரநாராயணப் பெருமாள் கோயிலில் அத்யயன மஹோத்ஸவம் தொடக்கம்

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜ நாயகி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில், அத்யயன மஹோத்ஸவம் சனிக்கிழமை


பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜ நாயகி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில், அத்யயன மஹோத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.
விழாவில், சனிக்கிழமை முதல் 10 நாள்கள் திருமொழித் திருநாள் (பகல்பத்து), அடுத்த 10 நாள்கள் திருவாய்மொழித் திருநாள்
(இராப்பத்து) உத்ஸவம் நடைபெற உள்ளது.
பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு பெருமாள் உத்ஸவர் திருமஞ்சனம், மாலை 3 மணிக்கு பிரபந்த சேவா காலம் தொடக்கம், 4.30 மணிக்கு பரபந்த சாற்று முறை, 5 மணிக்கு உத்ஸவர் உள் புறப்பாடு, 6 மணிக்கு நித்தியபடி பூஜை, இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் நடைசாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சியின்போது பெருமாள் உத்ஸவர் குழல் ஊதும் கிருஷ்ணனாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com