Enable Javscript for better performance
அரசுக் கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இயங்கி வரும் ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில், "பணம் மதிப்புக் குறைத்தல்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
    கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதோடு, பொருளாதாரம், சமூகம் தொடர்பான அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி பேராசிரியர் 
    ஏ.வில்லியம் சிறப்புரையாற்றினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெ.முகுந்தன் பேசுகையில், மாணவர்கள் தாங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளை தைரியத்துடன் எதிர்த்துப்  போராட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதுகலை இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள் ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பத் நாடகத்தை நடித்துக் காட்டினர். முன்னதாக ஆங்கிலத் துறை தலைவர் சா.டேவிட்செளந்தர் வரவேற்க, மாணவி ஆனந்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai