Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பு வீடுகள் விவகாரம்: பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பு வீடுகள் விவகாரம்: பொதுமக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 09th February 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் நீர்வழி புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்ய மறுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர் நகரை மழை, வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும் வகையில் நீர்வழித் தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. 
    இதன்படி, கடலூர் கெடிலம் ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதற்காக அண்ணா பாலம் முதல் தேவனாம்பட்டினம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அங்கு குடியிருந்து வரும் 330 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம்  முன்வந்தது.    
    ஆனால், இந்தப் பகுதியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லையாம். இதுதொடர்பாக சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வீடுகளை காலி செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டுமென பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த் துறையினர் ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி விளம்பரப்படுத்தினர். 
    இந்த நிலையில், வீடுகளை காலி செய்ய மறுப்புத் தெரிவித்த பொதுமக்கள் வியாழக்கிழமை மதியம் கடலூர் - சிதம்பரம் சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து, கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அங்கு இந்தப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai