Enable Javscript for better performance
இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். வட்ட துணைச் செயலர்கள் கே.ஞானசேகர், ஜி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் எம்.சேகர், மாவட்டக்குழு பி.ஜெகத்ரட்சகன், நகரச் செயலர் எஸ்.டி.குணசேகரன், மாவட்டக் குழு ஜி.மணிவண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட்டக்குழு உறுப்பினர்கள் பி.சரவணன், டி.எஸ்.ஏ.ராமநாதன், பி.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ஆர்ப்பாட்டத்தில், பண்ருட்டி ரயில்வே மேம்பாலம் பணியை முடிக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் அங்காடி, பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai