Enable Javscript for better performance
இந்திய கம்யூ. மாநாடு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் யார் என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் மாவட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
     இந்தக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலராக எம்.சேகர் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியின் மேல்மட்ட அளவில் ஏற்பட்ட பிரச்னையால் அவருக்குப் பதிலாக டி.மணிவாசகம் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து சேகர் நீதிமன்றம் சென்ற நிலையில், இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டது. எனவே, எம்.சேகர் மாவட்டச் செயலர் என்ற பெயரிலும்,  டி.மணிவாசகம் மாநிலக்குழு உறுப்பினராகவும் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிவாசகம் தலைமையிலான அணியினர் கட்சியின் மாவட்ட மாநாட்டை வருகிற 25, 26 ஆம் தேதிகளில் பண்ருட்டியில் நடத்திட திட்டமிட்டு அதற்கான ஆயத்த ப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, இந்த மாநாடு தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் மாநிலக்குழு அறிவித்துள்ளது.
    இதுதொடர்பாக மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலராக இருந்த எம்.சேகர் என்பவர், கட்சி விதிகளையும், கட்டுப்பாடுகளையும் மீறி செயல்பட்டதால் 2015 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சேகர் கடலூர் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்காடி வருகிறார். தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால் வரும் 25, 26-ஆம் தேதிகளில் பண்ருட்டியில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மாநாட்டை தாற்காலிகமாக ஒத்திவைப்பதென மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்று அதில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai