Enable Javscript for better performance
இளமையாக்கினார் கோயில் வரலாற்று உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்ற யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
    திருத்தல வரலாற்று உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை இரவு சுவாமி வீதிஉலா மற்றும் திருவோடு கொடுத்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    வியாழக்கிழமை சுவாமி வீதிஉலா வந்த பின்னர் கோயில் தீர்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது .
    சுரேஷ் குருக்கள், உ.வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டோர் வரலாற்று நிகழ்வுகளை நடத்தினர். 
    திருநீலகண்ட நாயனார் குருபூஜையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு யௌவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வந்தார். 
    ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்ப செட்டியார் மற்றும் அவரது குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai