Enable Javscript for better performance
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்- Dinamani

சுடச்சுட

    

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்

    By DIN  |   Published on : 09th February 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
     கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தற்போது  அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவை விற்பனைக்காக விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரப்படுவதால் நெல் மூட்டைகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, நெல் மூட்டைகளை விற்பனை வளாகத்தில் வைத்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே விற்பனைக் கூடத்தை ஆய்வுசெய்து, மாவட்டத்தில் கூடுதலாக  கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வரும் நெல் மூட்டைகளை பத்திரமாக வைத்திட கூடுதல்  இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
     ஆனாலும், விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
    கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் அதிகாலையில் மிதமான மழை பெய்வதால் நெல் மூட்டைகள் நனைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நனைந்த நெல்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் அவற்றை திரும்ப கொண்டு செல்லும் நிலை ஏற்படுமென விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே,  விற்பனையை விரைந்து செயல்படுத்தவேண்டும் எனவும், நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் தாற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai