Enable Javscript for better performance
தேசியக் கருத்தரங்கில் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேசியக் கருத்தரங்கில் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியக் கருத்தரங்கில் பரிசு பெற்ற குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். இதில், முதுகலை மாணவி ஜெ.விக்னேஷ்வரி முதல் பரிசும், இளங்கலை 3-ஆம் ஆண்டு மாணவி எஸ்.சிவகாமி, 2-ஆம் ஆண்டு மாணவிகள் வி.சங்கவி, ஜெ.ராஜலட்சுமி ஆகியோர் 3-ஆம் பரிசும் பெற்றனர். 
    தேசியக் கருத்தரங்கில் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கதிர்வேலு தலைமை வகித்தார். நிர்வாகக் குழுத் தலைவர் சட்டநாதன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினர் . நுண்ணுயிரியல் துறைத் தலைவர் அ.பாலசுப்ரமணியன் வழிகாட்டியாகச் செயல்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai