Enable Javscript for better performance
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்  சிதம்பரத்தில் 37-ஆவது நாட்டியாஞ்சலி விழா: பிப்ரவரி.13-இல் தொடக்கம- Dinamani

சுடச்சுட

    

    நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்  சிதம்பரத்தில் 37-ஆவது நாட்டியாஞ்சலி விழா: பிப்ரவரி.13-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 37-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்குகிறது. 
    கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா 1981-ஆம் ஆண்டு தொடங்கி,  தொடர்ந்து 33 ஆண்டுகளாக (2014-ஆம் ஆண்டு வரை) நடத்தப்பட்டு வந்தது. 
    இந்த நிலையில் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2015-ஆம் ஆண்டு பொது தீட்சிதர்களே நாட்டியாஞ்சலி விழாவை நடத்துவதாக அறிவித்து, தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் கோயிலில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வருகின்றனர்.
    இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா வருகிற 13-ஆம் தேதி மகா சிவராத்திரியன்று தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
    இதுகுறித்து அறக்கட்டளைச் செயலர் ஏ.சம்பந்தம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    மொத்தம் 5 நாள்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில், 44 நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 
    இதில் 6 நாட்டிய நாடகங்கள், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில், வட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். 
    இந்த ஆண்டு முதல் நாட்டியாஞ்சலியில் தேவார பன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. எதிர்காலத்தில் நாட்டியாஞ்சலி, இசை விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டியாஞ்சலி விழாவை சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் காமகோடி தொடக்கி வைத்துப் பேசுகிறார் என்றார் அவர். 
    பொருளாளர் ஆர்.நடராஜன், தொழிலதிபர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.முத்துக்குமரன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், ஆர்.ராமநாதன், செயலர்கள் ஆர்.நாகசாமி, ஏ.சம்பந்தம், பொருளாளர் ஆர்.நடராஜன், இணைச் செயலர் எம்.கணபதி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai