Enable Javscript for better performance
பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் கிடப்பில் போடப்பட்ட திருத்தேர் பணி- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் கிடப்பில் போடப்பட்ட திருத்தேர் பணி

    By DIN  |   Published on : 09th February 2018 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்யும் பணி தொடங்கி பாதியில் நின்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
    பண்ருட்டி, காந்தி வீதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 10 நாள்கள் பிரமோற்சவம் நடத்தப்பட்டு, பெளர்ணமியன்று திருத்தேர் புறப்பாடு நடத்தப்பட்டு வந்ததாம். 
    பின்னாளில் திருத்தேர் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக கோயில் திருவிழா நாள்களில் தேர் இல்லாமல் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
    இந்த நிலையில் இந்தக் கோயிலுக்கு புதிய தேர் செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. 
    மேலும், பக்தர்கள் சார்
    பிலும் நிதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய திருத் தேர் செய்யும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், இந்தப் பணி பாதியில் நின்று விட்டது.
    இருப்பினும், கடந்த ஓராண்டுக்கு முன்பு மீண்டும் திருத்தேர் பணிக்காக பூஜைகள் நடைபெற்றும் இது வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. 
    இதனால், முழுமை 
    பெறாத தேரில் உள்ள நுணுக்கமான வேலைப் பாடுகள் கொண்ட வடிவங்கள் பொலிவிழந்து வருகின்றன. தேரின் நடுப் பாகம், மரச் சட்டங்கள், இரும்பு அச்சு, தேர் சக்கரங்கள் ஆகியவை வெயில், மழையால் சேதமடைந்து வருகின்றன. 
    இதேபோல, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தேர் பணியும் தொடங்கியபோதும் தொடர்ந்து நடைபெறவில்லை என பக்தர்கள் கூறுகின்றனர். 
    எனவே, இதுகுறித்து 
    இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோயில் திருத் தேர்கள் ணியை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai