Enable Javscript for better performance
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இன்று தர்னா- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இன்று தர்னா

    By DIN  |   Published on : 09th February 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, சென்னையில் ஜாக்ஜியோ கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற உள்ளது. 
    இதுகுறித்து அந்தக் குழுவின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல், ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், நிரந்தர ஊதிய விகிதம் வழங்கப்படாத பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ஜாக்ஜியோ கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை (பிபி.9) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தர்னா நடைபெறுகிறது.
    இந்தப் போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநில அமைப்பாளர் பி.கே.சிவக்குமார் தலைமை வகிக்கிறார். இந்தப் போராட்டத்தில், கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ள 25 சங்கங்கள் பங்கேற்கின்றன. எனவே, கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக குழுவின் நிர்வாகிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai